பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
டெல்லி :பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் விமானங்களில் இலவசமாக பயணிக்கும்போது பெண்கள் மட்டும் பேருந்துகளில் இலவச பயணிக்கக்கூடாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறைகிறது என்ற மோடியின் பேச்சுக்கு கண்டனம் வலுத்துள்ளது.