புதுடெல்லி : டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி வெல்கம் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு,இடிபாடுகளுள் சிக்கியிருந்தவர்களைமீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தகவலறிந்து 5தீயணைப்பு வாகனங்களுடன தீயணைப்பு வீரர்கள்அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர் மற்றும் மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மீட்பு பணி தீவிரமடைந்த நிலையில், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான 6 பேர் சடலங்களை மீட்டனர்.
மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டனர்பின்னர் காயமடைந்த 8 பேரில் ஒருவரை ஜிடிபி மருத்துவமனையிலும், 7 பேர் ஜேபிசி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.