Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதூர் மத்திய ஒன்றியத்தில் கிராமம், கிராமமாக திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் : தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து புதூர் மத்திய ஒன்றிய பகுதிகளில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ வாக்குகள் சேகரித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியை ஆதரித்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையிலான திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

புதூர் மத்திய ஒன்றிய கிராமங்களான நாகலாபுரம், கவுண்டன்பட்டி, சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிபட்டி, சின்னவநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் திமுக பாக முகவர் கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தீவிர களப்பணியாற்ற வேண்டுமென நிர்வாகிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்தல் பொறுப்பாளர்கள் மாரிமுத்து, முருகேசன், மோகன்தாஸ், ஜெயகணேஷ் உள்பட கிளை செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பிரசாரத்தின்போது வேம்பாரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராஜசேகரன், சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் பாஸ்கரன் உட்பட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாரிச்சாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, புஷ்பராஜ், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் உடனிருந்தனர்.