டெல்லி: கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவையே இந்த பட்ஜெட்டிலும் இருப்பது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவையே இந்த பட்ஜெட்டிலும் இருப்பது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று நாட்டு இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் மீது ஒன்றிய அரசு நம்பிக்கை இழந்திருக்க வேண்டும் அல்லது செயல்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Advertisement