புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே பன்னிரெண்டாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. விவசாயியான இவர், தனது நிலப்பிரச்னை தொடர்பாக ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவுக்கு ரசீது வழங்க (சிஎஸ்ஆர்) ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று வீரமணியிடம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் (59) கேட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்த வீரமணி, அவர்கள் அறிவுரைப்படி, ரசாயணம் தடவிய ரூ.10,000-ஐ நேற்று மாலை ஆகனக்கோட்டை காவல்நிலையம் சென்று, எஸ்.ஐ சங்கரிடம் ரூ.10 ஆயிரத்தை வீரமணி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சங்கரை ைகது செய்தனர்.


