Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலை உணவு திட்டம் விரிவாக்கம் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று (நேற்று) ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறேன். இது மனித நேயச் செயல்திட்டம். மேலும், பொருளாதார நல்விளைவுகளை ஏற்படுத்தும் திட்டம். முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.