சென்னை: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி (பாஜ) மகள் கருணாம்பிகை மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்ற மகளை இழந்து வாடும், சரஸ்வதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement