Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன: ஹரியானா பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு

ஹரியானா: பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன என ஹரியானா பரப்புரையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நுஹ் மற்றும் மகேந்திரகர் நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: காங்கிரஸ் கட்சியினரின் இதயங்களில் அன்பும் சகோதரத்துவமும் உள்ளது. நாம் அன்பு மற்றும் ஒற்றுமையை விதைக்கிறோம்; பாஜக வெறுப்பை விதைக்கிறது. எங்கு வெறுப்பை பாஜக விதைத்ததோ அங்கெல்லாம் நடை பயணத்தின்போது அன்பை விதைத்தேன்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியன அரசமைப்பை அழித்து வருகின்றன. அரசமைப்பை பாதுகாக்க நினைப்போர் ஒருபுறம்; அழிக்க நினைப்போர் மறுபுறம் உள்ளனர். இந்த மாநிலத்தை பா.ஜ.க அரசு சீரழித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை பட்டியலில் எப்படி ஹரியானாவை முதன்மை இடத்திற்கு கொண்டு வந்தோம் என்பதை பற்றி பிரதமர் மோடி விளக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கான அரசை பிரதமர் மோடி நடத்துகிறார். 20 -25 பேரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கடன் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி கூற வேண்டும்.