பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது: பீகார் தேஜ கூட்டணி எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: பீகாரில் கடந்த மாதம் சட்ட பேரவை தேர்தல் நடந்தது.இதில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் 10வது முறையாக முதல்வராகியுள்ளார்.
இந்த நிலையில், பீகார் மாநில தேஜ கூட்டணி எம்பிக்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தேர்தலில் தேஜ கூட்டணியின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடியை சந்தித்த பின்னர் லோக் ஜனசக்தி எம்பி ஷாம்பவி சவுத்ரி, பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றிக்கு பிரசாரம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம். அப்போது பெரிய வெற்றியுடன் அதிக பொறுப்பும் வருகிறது. தேஜ கூட்டணி எம்பிக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தெளிவான முன்னுரிமையுடன் எதிர்மறை வெறுப்பு, பொய்கள் போன்றவற்றை விட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எம்பிக்களை மோடி அறிவுறுத்தினார் என்றார்.


