சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2024ம் ஆண்டிற்கான பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென்-இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி நடந்த முதல் சுற்றில், குகேஷ் தோல்வியை தழுவினார். 26ம் தேதி நடந்த இரண்டாவது சுற்றில் குகேஷ் டிரா செய்தார். நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது சுற்றில் குகேஷ், ‘குயின்ஸ் காம் பிட்’ என்ற டெக்னிக்கை முதன்முறையாக கையாண்டு, டிங் லிரெனை வீழ்த்தினார். இதன்மூலம் டிங் லிரென், குகேஷ் தலா 1.5 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர். நான்காவது சுற்று போட்டி இன்று (29ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது. இதில், குகேஷ் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு சாம்பியன் டிங் லிரெனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், குகேஷின் ஆட்டம் இருக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement


