Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலகின் சிறந்த பல்கலை.கள் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி: 383வது இடத்தில் அண்ணா பல்கலை.

புதுடெல்லி: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்தை பிடித்துள்ளது. லண்டனை சேர்ந்த உயர்கல்வி ஆய்வாளர் குவாக்குரெல்லி சைமண்ட்ஸ் (க்யூஎஸ்) 2025ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், டாப் 150 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஐஐடி மும்பை மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஐஐடி மும்பை கடந்த ஆண்டு 149வது இடத்தில் இருந்து இம்முறை 118வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஐஐடி டெல்லி 47 இடங்கள் முன்னேறி 150வது இடத்தை பிடித்துள்ளது. இதுதவிர, டெல்லி பல்கலைக்கழகம் 328வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்திலும் உள்ளன. 1500க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இந்த தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த 46 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் க்யூஎஸ் தரவரிசையில் அதிக பல்கலைக்கழங்கள் இடம் பெற்ற உலகின் 7வது நாடாகவும் ஆசியாவின் 3வது நாடாகாவும் இந்தியா உள்ளது.