பெங்களூரு: சமாஜ்வாடி எம்பி ராஜீவ் ராய், கடந்த ஞாயிறன்று பெங்களூருவில் இருந்து விமானத்தை பிடிக்க விமான நிலையம் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளேன். ராஜ்குமார் சமாதி சாலையில் ஒரு மணி நேரம் தவிக்கிறேன். எனது விமானத்தை தவறவிட்டு விடுவேன் என்ற பதற்றம் அதிகரிக்கிறது. பெங்களூருவில் மோசமான போக்குவரத்து மேலாண்மையை கடைபிடிக்கிறீர்கள். கடமை உணர்வு இல்லாத உதவாத போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய நிலையில் பெங்களூரு போக்குவரத்து எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டிருந்தார். மேலும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கை டேக் செய்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘டெல்லியில் எம்பி ராஜீவ் ராயை சந்தித்து தலைநகரில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கிறது என்று காட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement


