Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 ேபரின் வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 150 பசுக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். மத்திய பிரதேச மாநிலம் நைன்பூர் அடுத்த பைன்வாஹி பகுதியில் இறைச்சிக்காக ஏராளமான பசுக்கள் அடைத்து வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் 150 பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருந்து மாடுகள் மீட்கப்பட்டன.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிலோ கணக்கில் மாட்டு இறைச்சி மீட்கப்பட்டது. மேலும் வீட்டின் ஒரு அறையில் மாடுகளின் கொழுப்பு, தோல், எலும்புகளை அதிகாரிகள் மீட்டனர். இதுகுறித்து போலீஸ் எஸ்பி ரஜத் சக்லேச்சா கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட மாட்டிறிச்சையின் மாதிரிகளை ஐதராபாத் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி உள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால், அவை இடிக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 150 பசுக்கள் கால்நடை காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் பசுவதை சட்டம் அமலில் உள்ளதால், சட்டவிரோதமாக பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆகியன பசுக்களுடன் தொடர்புடையவை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.