சிறு, குறு தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்
சென்னை: எம்எஸ்எம்இ துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை, கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. வங்கிகள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாமல் பெண்களுக்கு உதவிடும் வகையில், கிராமபுற பொருளாதாரத்தினை உயர்த்திட விரைந்து கடன் உதவிகளை வழங்க வேண்டும்’’ என்றார்.