Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.2.60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் Bank of Baroda வங்கி உதவி பொது மேலளார் கைது

சென்னை: புகார்தாரர் லினா கோஹைன் உதவி பொது மேலளார், தலைமை கிளை, பாங்க் ஆப் ப்ரோடா வங்கி, என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்ற Lemooria Foods Pvt.Ltd இயக்குனர் மற்றும் இராஜலட்சுமி, சதிஷ்பாபு ஆகிய 3 பேரும் கூட்டாக சேர்ந்து வங்கியில் Term Loan ஆக ரூ.2.60 கோடி கடன் பெற்று, அதில் ரூ.1.80 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், உத்தரவின்பேரில், மேற்கொண்ட விசாரணையில், மேற்படி எதிரிகள் இராஜலட்சுமி, சதிஷ்பாபு மற்றும் ராஜா என்பவர்கள் வங்கியை ஏமாற்றும் நோக்கில் Lemooria Foods Pvt.Ltd நிறுவனத்தின் பெயரில் டிரிங்க் ஜீஸ் மற்றும் ஜீஸ் பவுடர் தயாரிக்கும் ஆலையை அமைக்க போலியான ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் Term Loan கடனாக ரூ.2.60கோடி பெற்று அதில் ரூ. 1.80 கோடி வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது.

இதில் எதிரிகள் இராஜலட்சுமி, சதிஷ்பாபு மற்றும் ராஜா மூவரும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் விசாரணையில் முக்கிய குற்றவாளியான இராதகிருஷ்ணன் (AGM.Rtd) Bank of Baroda என்பவர் Lemooria Foods Pvt.Ltd நிறுவனம், வாங்காத இயந்திரங்களை வாங்கியதாக காட்டி Term Loan கொடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் தலைமறைவாக இருந்த எதிரியை நீண்ட நாட்களாக தேடி வந்த நிலையில் 27.11.2024 ஹைதராபாத்தில் மேற்படி வழக்கில் முக்கிய குற்றவாளியான ப.இராதகிருஷ்ணன் ஆ/வ.61, த/பெ.பமிடிபதி (AGM.Rtd), Bank of Baroda என்பவரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நடவடிக்கை மேற்கண்ட குழுவிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள்.