கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
டெல்லி: கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். வாராக்கடன் தள்ளுபடியல்ல; வங்கி நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார். 2014-15-ல் வாராக்கடன் விலக்கி வைப்பு ரூ.58,786 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.16.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன்களில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ரூ.9.26 லட்சம் கோடியாகும் என தெரிவித்தார்.