சென்னை, ஜூலை 17: சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன் (28), திருமணமாகி யாழினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 13ம் ேததி குழந்தைக்கு அதிகளவில் சளி இருந்ததால் தைலத்துடன் கற்பூரம் கலந்து குழந்தையின் மார்பு, மூக்கில் தேய்த்துள்ளனர். இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று முன்தினம் உயிரிழந்தது. போலீசார் குழந்தையின் தந்தை தேவநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement