Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தராகண்ட் பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்தனர். டெல்லியின் அருகே உள்ள நொய்டாவிலிருந்து 17 பேர் அடங்கிய டெம்போ வாகனம் ஒன்று பத்ரிநாத் நோக்கி சென்றுள்ளது. ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே உள்ள ருத்தரபிரயாக் அருகே வேன் சென்ற சமயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைக்குப்புற உருண்டு, நெடுஞ்சாலையில் கீழே ஓடிக்கொண்டிருந்த அலகனந்தா ஆற்றில் விழுந்தது. இந்த ஆறானது 150 அடியிலிருந்து 200 அடி வரை ஆழம் கொண்டதாக உள்ளது .

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த SDRF மற்றும் உள்ளூர் போலீசார், மீட்புப் படையுடருடன் இணைந்து ஆற்றில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.