பணியிடங்கள் விவரம்:
1. Vaidya (Medical Officer): 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: ஆயுர்வேதா பிரிவில் எம்எஸ்/எம்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Clinical Registrar: 2 இடங்கள். வயது: 40க்குள். தகுதி: ஆயுர்வேதா பிரிவில் எம்எஸ்/எம்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Accounts Officer: 1 இடம். வயது: 56க்குள். தகுதி: சிஏ/பைனான்சியல் மேனேஜ்மென்ட்/வணிகவியல் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Nursing Officer: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்): வயது: 30க்குள். தகுதி: நர்சிங் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆயுஷ் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் IANC யில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Pharmacist: Ayurveda): 2 இடங்கள். (பொது). வயது: 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆயுஷ் நர்சிங் மற்றும் பார்மசியில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. Multi Tasking Staff (MTS): 22 இடங்கள். வயது: 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
கட்டணம்: பணி எண்: 1க்கு பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.3,500. எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ₹3,000. பணி எண் 2,3 மற்றும் 4க்கு பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.2,500, எஸ்சி/எஸ்டி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2 ஆயிரம். பணி எண்: 5 மற்றும் 6க்கு பொது மற்றும் ஒபிசியினருக்கு 2,000. எஸ்சி/எஸ்டி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1800. இதை ஆன்லைனில் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.nia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.12.2024.