சென்னை: இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களுக்கான அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆயுர்வைட் என்ற பெயரில் ஆயுர்வேத தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அப்போலோ ஆயுர்வைட் இன் தயாரிப்பு வரம்பு, வெவ்வேறு தயாரிப்பு வகைகளுக்குப் பொருந்தும் வகையில் கன உலோகங்கள், அஃப்லாடாக்ஸின்கள், நுண்ணுயிரி உள்ளடக்கம் போன்றவற்றின் இருப்பு குறித்து அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் பாதுகாப்பானவை என்று சான்றளிக்கப்பட்டுள்ள, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உருவாக்கங்களை கொண்டுள்ளது.
அப்போலோ ஆயுர்வைட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது: பாரம்பரிய மருத்துவத்தில் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் தரநிலைகளை மறுவரையறை செய்கின்ற வகையில், அப்போலோ ஆயுர்வைட் நிறுவனம் பாதுகாப்பானதாக சோதனை செய்யப்பட்ட ஆயுர்வேத தயாரிப்புகளில் ஈடுபடுவது ஒரு முக்கிய முயற்சியைக் குறிக்கிறது.
இந்த விரிவாக்கம் மருத்துவ சிறப்பின் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது மேலும் சான்றுகள் சார்ந்த, துல்லியமான ஆயுர்வேதத்திற்கான ஒரு ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. புதுமைகளை காலத்தால் போற்றப்படும் ஞானத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அப்போலோ ஆயுர்வைட் அதன் பாதையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாரம்பரிய மருத்துவர் பரிந்துரை மூலம் கிடைக்கும் அதேவேளை, மருந்தகத்தில் நேரடியாக வாங்கக்கூடிய மற்றும் மருத்துவ உணவு வரிசைகள் வணிக மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒரு பரந்த வலையமைப்பு மூலம் கிடைக்கும். விஞ்ஞான ரீதியாக சரிபார்க்கப்பட்ட, தாவர-செயலூக்கி அடிப்படையிலான, சர்க்கரை இல்லாத, செயற்கை நிறங்கள் மற்றும் சுவையூட்டிகள் இல்லாதவையாக இருக்கும் உணவு சப்ளிமெண்ட்களை உருவாக்கி வழங்குவதற்கு அப்போலோ ஆயுர்வைட் நிறுவனம் ஒருங்கிணைந்த அமைப்புகள் உயிரியல் தள நிறுவனமான அவெஸ்தாஜென் லிமிடெட் உடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது என்று கூறினார்.