Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அயோத்தி மக்களுக்கு யோகி அரசு அநீதி.. ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவை தோற்கடித்த மக்களுக்கு நன்றி: அகிலேஷ் யாதவ் பேட்டி!!

டெல்லி: அயோத்தி இடம்பெற்றுள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவை தோற்கடித்த மக்களுக்கு அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; உண்மையை சொல்லப்போனால் உ.பி.யில் இன்னும் அதிக இடங்களை பாஜக இழந்திருக்க வேண்டும். அயோத்தி மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை விலையை யோகி ஆதித்யநாத் அரசு தரவில்லை.

அயோத்தி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலத்தை பறித்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு. அயோத்தி மக்களுக்கு எதிராக பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்தியதாகவும் அகிலேஷ் குற்றச்சாட்டியுள்ளார். அயோத்தி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டினார். ஒரு புனிதமான பணிக்காக ஏழைகளை யோகி ஆதித்யநாத் அரசு அழித்துவிட்டதாகவும் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். யோகி அரசால் அநீதி இழைக்கப்பட்டதால்தான் அயோத்தி, அதை ஒட்டிய நகர மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது பகுஜன் சமாஜ் கட்சி அமைந்திருப்பதாகவும், பாஜக வென்ற 14 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற 2 தொகுதியில் பெற்ற வித்தியாசத்தை விட பிஎஸ்பி வாக்குகள் அதிகம் என்றும் அவர் கூறினார். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் மேலும் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தோற்றிருக்கும். அக்பர்பூரில் பகுஜன் சமாஜ் 73,140 வாக்குகள் பெற்றதால் பா.ஜ.க.வை விட 44,345 வாக்குகள் குறைவாக பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வியடைந்தது.

15,647 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க.விடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற அலிகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது. 28,670 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த அம்ரோகா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி 1,64,099 வாக்குகள் பெற்றுள்ளது. பதோகி தொகுதியில் திரிணாமுல் காங்கிரசும் பரூகாபாத் தொகுதியில் காங்கிரசும் தோல்வியடைய பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரித்ததே காரணம் என்கிறார். பிஎஸ்பி வாக்கை பிரித்ததால் பதேபூர் சிக்ரி, கர்தோய், மீரட், மீர்சாபூர், மிஸ்ரிக், ஃபூல்பூர், ஷாஜகான்பூர், உன்னாவ் தொகுதிகளில் சமாஜ்வாதி தோல்வியடைந்து.

பி.எஸ்.பி. வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு 19 இடங்களே கிடைத்திருக்கும். உ.பி.யில் பா.ஜ.க.வின் பலம் குறைந்திருந்தால் அதன் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 226-ஆகவும் தேஜ கூட்டணி பலம் 278-ஆகவும் இருந்திருக்கும். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் இந்தியா கூட்டணிக்கு 248 இடங்கள் கிடைத்திருக்கும். பிரகாஷ் அம்பேத்கர் கட்சி வாக்கை பிரித்ததால் அகோலாவில் காங்கிரஸ், புல்தானா, ஹக்கனங்கலே, மும்பை வடமேற்கு தொகுதிகளில் உத்தவ் சிவசேனை வெற்றியை நிலைநாட்டியது. பிரகாஷ் அம்பேத்கர் கட்சி வாக்கை பிரிக்காமல் இருந்திருந்தால் இந்தியா கூட்டணிக்கு 252 இடங்கள் கிடைத்திருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.