Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவிநாசி அரசு கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

அவிநாசி : அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பின் ஆசிரிய பொறுப்பாளர்கள் மணிவண்ணன், அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பேசுகையில், ‘புதிய தலைமுறை மாணவர்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு ஒருபொழுதும் ஆளாக கூடாது என்றும் இந்த விழிப்புணர்வின் மூலம் நீங்கள் மட்டுமல்லாது உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களையும் இந்த பழக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய கடமை. நீங்கள்தான் ஒரு ஆரோக்கியமான ஒரு உலகத்தை உருவாக்குகிற நாளைய சமூகம்’ என்றார்.

இதில், மாணவ மாணவிகள், பேராசிரியகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நிகழ்வின் இறுதியில், போதைப்பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என கல்லூரி மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.