Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவடி வாகன தொழிற்சாலையில் 1850 இடங்கள்

பணி: ஜூனியர் டெக்னீசியன். மொத்த காலியிடங்கள்: 1850.

சம்பளம்: ரூ.21 ஆயிரம் மற்றும் இதர படிகள்.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் டெக்னீசியன் (பிளாக் ஸ்மித்): 17 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-3).

2. ஜூனியர் டெக்னீசியன் (கார்பென்டர்): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)

3. ஜூனியர் டெக்னீசியன் (எலக்ட்ரீசியன்): 186 இடங்கள் (பொது-88, பொருளாதார பிற்பட்டோர்-16, ஒபிசி-46, எஸ்சி-34, எஸ்டி-2).

4. ஜூனியர் டெக்னீசியன் (எலக்ட்ரோபிளேட்டர்): 3 இடங்கள் (பொது)

5. ஜூனியர் டெக்னீசியன் (எக்சாமினர்)

i) எலக்ட்ரீசியன்: 12 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2)

ii) பிட்டர் ஜெனரல்: 23 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-5)

iii) பிட்டர் எலக்ட்ரானிக்ஸ்: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)

iv) மிஷினிஸ்ட்: 21 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-3)

v) வெல்டர்: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1).

6. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் ஜெனரல்): 668 இடங்கள் (பொது-333, பொருளாதார பிற்பட்டோர்-61, ஒபிசி-159, எஸ்சி-109, எஸ்டி-6)

7. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர்- ஏஎப்வி): 49 இடங்கள் (பொது-23, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-10, எஸ்சி-11).

8. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் ஆட்டோ எலக்ட்ரிக்): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)

9. ஜூனியர் டெக்னீசியன் (பிட்டர் எலக்ட்ரானிக்ஸ்): 83 இடங்கள் (பொது-42, பொருளாதார பிற்பட்டோர்-7,ஒபிசி-20, எஸ்சி-14).

10. ஜூனியர் டெக்னீசியன் (ஹீட் ட்ரீட்மென்ட் ஆபரேட்டர்): 12 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2)

11. ஜூனியர் டெக்னீசியன் (மிஷினிஸ்ட்): 430 இடங்கள் (பொது-215, பொருளாதார பிற்பட்டோர்-37, ஒபிசி-102, எஸ்சி-72, எஸ்டி-4)

12. ஜூனியர் டெக்னீசியன் (ஆபரேட்டர் மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மென்ட்): 60 இடங்கள் (பொது-29, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-16, எஸ்சி-10).

13. ஜூனியர் டெக்னீசியன் (பெயின்டர்): 24 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-4)

14. ஜூனியர் டெக்னீசியன் (ரிக்கர்): 36 இடங்கள் (பொது-18, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-8, எஸ்சி-7)

15. ஜூனியர் டெக்னீசியன் (சாண்ட் மற்றும் ஷாட் பிளாஸ்டர்): 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1).

16. ஜூனியர் டெக்னீசியன் (வெல்டர்): 200 இடங்கள் (பொது-100, பொருளாதார பிற்பட்டோர்-20, ஒபிசி-44, எஸ்சி-34, எஸ்டி-2).

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

வயது: 19.07.2025 தேதியின்படி 35க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

டிரேடு டெஸ்ட், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

கட்டணம்: ரூ.300/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.oftr.formflix.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.07.2025.