Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்...

* ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், அபிஷேக் போரெல், முகேஷ் குமார், கலீல் அகமது, யஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், தனுஷ் கோடியன்.

* பாகிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், சோயிப் பஷிர்.

* பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மகளிர் அணியில் விளையாட இந்தோனேசியாவை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நி மேட் புத்ரி சுவன்தேவி (26 வயது) ஒப்பந்தமாகி உள்ளார்.

* முகமதன் ஸ்போர்டிங் அணியுடன் கொல்கத்தாவில் நடந்த போட்டியின்போது உள்ளூர் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் உள்பட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் மைதானத்துக்குள் வீசியதுடன் கேலரியில் பட்டாசுகளைக் கொளுத்தி மோசமாக நடந்துகொண்டதாக கேரளா பிளேஸ்டர்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.

* எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா ஏ அணி இன்று ஓமன் அணியுடன் மோதுகிறது. ஏ பிரிவில் தொடர்ச்சியாக 2 வெற்றியுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏ அணி (4 புள்ளி) அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (அதிகாரப்பூர்வமற்றது, 4 நாள் ஆட்டம்) மெக்கே, கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் அக்.31ல் தொடங்குகிறது.

* இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி, பல்லெகெலேவில் இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.