Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி கிருத்திகை விழா கோலாகலம்.. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு!!

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகை தினத்தில் விரதம் இருந்தால் முருகன் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மேலும், அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.