Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சி: ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு..!!

சென்னை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சித்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் காளிங்கராயன் அணையின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1,50 டி.எம்.சி. உபரிநீர் வீணாகாமல் தடுப்பு. 6 நீரேற்று நிலையங்கள் வழியாக 1,065 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், திட்டத்தால் பயன்பெறும்.

திட்டத்தின் கீழ் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகள் நிரப்பப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். இத்தகைய அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் அத்திகடவு அவினாசி திட்ட தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பின், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,

அத்திக்கடவு திட்டத்தில் பாஜக அரசியல் செய்கிறது

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சித்ததாக ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். அத்திக்கடவு திட்டம் திறப்பு விழா நடைபெற உள்ளதை தெரிந்து கொண்ட அண்ணாமலை அரசியல் செய்ய முயற்சித்தார். அத்திக்கடவு திட்டம் திறப்பு தேதி குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்த நிலையில் பாஜக விளம்பரம் தேட முயற்சி.

முதல்வர் ஸ்டாலினால் அத்திக்கடவு திட்டம் நனவானது

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் நிலத்தை கையகப்படுத்தி

பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தினார். 50 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டங்கள் மூலம் கிடைத்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு எடுத்த துரித நடவடிக்கையால் அத்திக்கடவு திட்டம் இன்று செயல்பாட்டுக்கு வந்தது. இவ்வாறு தெரிவித்தார்.