Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆசிய உலக திறன் தைபே 2025 போட்டி: சாதனை படைத்த இளைஞர்களுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு

சென்னை: ஆசிய உலக திறன் தைபே 2025 போட்டியில் சாதனை படத்து இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த இளைஞர்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி கெளரவித்தார். 2025 நவம்பர் 27 முதல் 29 வரை தைவானின் தைபே நகரில் உள்ள நாங்காங் எக்ஸிபிஷன் சென்டரில் ஆசிய உலக திறன் தைபே 2025 நடந்து. இப்போட்டியில் மொத்த நாடுகளில் இந்தியா 8வது இடத்தைப் பெற்றது. ஆசிய அளவிலான திறன் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 23 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து 3 போட்டியாளர்கள் தேர்வாகினர்.

பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் இந்தியா 1 வெள்ளி , 2 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 3 Medal of Excellence ஆகியவற்றை பெற்றுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 2 போட்டியாளர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராமசாமி - ரோபோட் சிஸ்டம் இன்டக்ரேசன் (Robot System Integration) திறன் பிரிவில் வெண்கலப் பதக்கமும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மபாஸ் - சாப்ட்வேர் அப்ளிக்கேசன் டெவலப்மென்ட் பிரிவில் மெடல் ஆப் எக்ஸலன்ஸ், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் - ப்ளாஸ்டெரிங் & ட்ரை வால் சிஸ்டல் திறன் பிரிவில் பங்கேற்று இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தினார்.

போட்டியில் சிறப்பான சாதனை பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்களை கவுரவிக்கும் சிறப்பு பாராட்டு விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசாலோலைகள் வழங்கி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். இந்நிகழ்வில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் கூடுதல் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிரந்தி குமார் பாடி மற்றும் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.