Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜப்பான் பாப் பாடகியுடன் மேலும் ஒரு குழந்தை பெற்ற எலான் மஸ்க்: அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: ஜப்பான் பாப் பாடகியுடன் மேலும் ஒரு குழந்தை பெற்ற எலான் மஸ்க் குறித்த தகவல்கள் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் (54) தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது சர்ச்சைகள் வெளியாகி வருவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது போதைப்பொருள் பயன்பாடு மற்றும் குடும்பப் பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 குழந்தைகளின் தந்தையான எலான் மஸ்க், குழந்தைகளைப் பெறுவது குறித்து எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவர் ஆனார்.

அவர் ஜப்பானிய பாப் பாடகி ஆஷ்லே செயிண்ட் கிளேருடன் ஒரு குழந்தை பெற்றதாகவும், தனது விந்தணுவை யாருக்கும் தரத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இதில் தனது உதவும் மனப்பான்மையின் ஒரு பகுதியாகவும், மக்கள் குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற தனது நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்ததாக ஸ்ட்.கிளெய்ர் என்ற பெண் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் முதலில் கடந்த 2002ல் தனது முன்னாள் மனைவி ஜஸ்டின் வில்சனுடன் மகன் நெவாடா அலெக்ஸாண்டரைப் பெற்றார். ஆனால் அவர் 10 வாரங்களில் இறந்தார். பின்னர் அவர்களுக்கு மேலும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. கடந்த 2020ல் பாடகி கிரைம்ஸுடன் முதல் குழந்தை பிறந்தது.

பின்னர் மேலும் இரு குழந்தைகளைப் பெற்றனர். கடந்த 2021ல், எலான் மஸ்க் தனது நிறுவனமான நியூராலிங்கின் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸுடன் இரட்டையர்களைப் பெற்றார். பின்னர் 2024ல் மற்றொரு குழந்தையைப் பெற்றார். இந்தாண்டில் ஸ்ட்.கிளெய்ர் என்ற பெண், எலான் மஸ்குடன் தனக்கு ரோமுலஸ் என்ற குழந்தை பிறந்ததாக அறிவித்தார். மேலும் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி மேலும் சில பெண்களை குழந்தைகளைப் பெற அழைத்ததாகவும், உலக மக்கள்தொகை குறைவதைத் தடுக்க ‘லீஜியன்’ (ரோமானிய படைப்பிரிவு) அளவுக்கு குழந்தைகளைப் பெற விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஸ்ட்.கிளெய்ர் தெரிவித்துள்ளார்.