அரியலூர் : அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூரில் இருந்து திருச்சி செல்ல இருந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் பயணி ஒருவரின் பையில் ரூ.77 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்துள்ளன.
Advertisement