*அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர் : அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளையும், திருமானூர் ஒன்றியம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 1 வளர்ச்சித் திட்டப் பணியையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
மேலும், கீழக்கொளத்தூர் கிராமம் மரகத் பூச்சோலையில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளையும், திருமானூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் 32 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி அரியலூர் நகராட்சி வார்டு எண் 5-க்குட்பட்ட இரயில்வே ஸ்டேஷன் சாலை தெருவில் 412 மீ அளவில் ரூ.13.41 இலட்சம் மதிப்பீட்டிலும், மணியன்குட்டை தெருவில் 200 மீ அளவில் ரூ.6.17 இலட்சம் மதிப்பீட்டிலும், கே.கே.நகர் பகுதியில் 670மீ அளவில் ரூ.27.53 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைத்தல் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சி வார்டு எண் 6-க்குட்பட்ட பூக்கார மாரியம்மன் கோவில் தெரு, பூக்காரத்தெருவில் 212மீ அளவில் ரூ.6.9 லட்சம் மதிப்பீட்டிலும், பென்னி ஹவுஸ் தெருவில் 130மீ அளவில் ரூ.5.34 லட்சம் மதிப்பீட்டிலும், கீரைக்காரத் தெருவில் 370 மீ அளவில் ரூ.12.85 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சி வார்டு எண்.4-க்குட்பட்ட காமராஜர் நகரில் 492 மீ அளவில் ரூ.18.26 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் வாகனத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரியலூர் சிங்காரத்தெரு, அரியலூர் ஊராட்சி ஒன்றியம் முன்புறம் உள்ள சாலையினை அகலப்படுத்துதல் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் ஊராட்சியில் ரூ.30 இலட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை துவக்கி வைத்து, பின்னர் கீழக்கொளத்தூர் மரகத் பூச்சோலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதே போல், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வார்டுகளில் பல லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், துணைத்தலைவர் கலியமூர்த்தி,அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகர், லதா பாலு, நகரச் செயலாளர் முருகேசன், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.