சென்னை: முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அறிவுத்திருவிழா எடுத்த நம் இயக்கத்தின் அறிவுமுகமாக டெல்லியிலும் தோகா மாநாட்டிலும் தடம் பதித்தவர் முரசொலி மாறன். கலைஞரின் மனசாட்சியாகவும், கழகம் கடந்து வந்த நெருப்பாறுகளின் வரலாற்று சாட்சியாகவும் நிலைபெற்ற முரசொலி மாறன் நினைவு நாளில் அவரது பணிகளைப் போற்றி வணங்குகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


