அரபு எமிரேட்ஸ் சொன்ன வார்த்தை.. பாகிஸ்தான் மேல் விழுந்த இடி.. அதிர்ச்சியில் பாகிஸ்தானியர்கள் மக்கள்!
பயங்கரவாதத்துக்கு பெயர்போன பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அரபு எமிரேட்ஸ்க்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்களிபில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்றாகும். இதன் காரணமாக துபாய் இருந்து லட்சக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் வேலைக்காக செல்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் விசாக்காக விண்ணப்பித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.
இப்படி செல்லும் பாகிஸ்தான் குடிமக்கள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அடைந்த பிறகு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அரபு எமிரேட்ஸ் குற்றம் சாற்றியுள்ளது இதன் காரணமாக அவர்களுக்கு விசா வழங்குவதை அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானியர்கள் போதைப்பொருள் கடத்தல், மனிதர்கள் கடத்தல் மற்றும் வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அதைப்போல பாகிஸ்தான்னின் மக்கள் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் இத்தகையை நடவடிக்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இறங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த நடவடிக்கையால் பாக்கிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதைப்போல எமிரேட்ஸில் தங்கி இருக்கும் பாக்கிஸ்தான் மக்களின் விசாக்கள் காலவகையாகும் வரை செல்லுபடியாகும்.
ஆனால் புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஐக்கிய அரபு எமிரேஸ்ட் தூதரங்களிலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விசா மையங்களிலோ வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலம் மற்றும் ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசாகள் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுத் அரேபிய மற்றும் பாகிஸ்தான் 30 நகரங்களை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதற்கு காலவரையற்ற தடை விதித்திருந்தனர். சமீபத்தில் ஆண்டுகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறி 4,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பிச்சைக்காரர்களை சவுதி அரேபிய அரசு கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் மக்களுக்கு இனி எமிரேஸ்ட்க்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

