Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. 39 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வடசென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், தென்சென்னை தொகுதிக்கான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்குகள் லயோலோ கல்லூரியிலும் எண்ணப்படுகிறது. நாளை(செவ்வாய்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தென்சென்னை, மத்தியசென்னை மற்றும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கைபேசி எண். 94459 10953. பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராஜேஷ் குமார், எஸ்.சி.எஸ்.,(கைபேசி எண். 94459 10932) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு. ஜிதேந்திரா ககுஸ்தே, எஸ்.சி.எஸ்.,(கைபேசி எண். 94459 10940), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் டி.சுரேஷ்,(கைபேசி எண்.94459 10956) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா (கைபேசி எண்.94459 10957), மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு முகமது சஃபிக் சக், எஸ்.சி.எஸ்.,(கைபேசி எண்.94459 10945) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* பார்வையாளர் பணி ஒருங்கிணைக்க நோடல் அதிகாரிகள் 2 பேர் நியமனம்

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத் துறை செயலாளர் நந்தக்குமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.