Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை புதுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, புதுமை தொழில் முனைவோர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காலநிலை மாற்றத்தால் நம் புவிக்கும், புவியில் வாழும் உயிரினங்களுக்கும் அவற்றின் வாழ்வாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்கவகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிக்கவும், காலநிலை மீள்திறனை வளர்த்தெடுக்கவும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை மற்றும் தூய்மை ஆற்றல், வளச் சுரண்டலை தடுப்பதற்கான சுற்றுச்சூழல்-மாற்று தீர்வுகள், காலநிலை நிதி மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுக்கு பங்களிக்கும் தொடக்க நிறுவனங்களை அடையாளம் கண்டு, ஆதரித்து வளர்த்தெடுக்க சஸ்டெய்ன் டிஎன் (Sustain TN) எனும் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரால் 2024-2025ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட் அப் டி.என். நிறுவனத்துடன் இணைந்து மேற்கூறிய துறைகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வகையில் உள்ள 10 புத்தொழில் நிறுவனங்கள்/புத்தொழில் கருத்துருக்கள் அடையாளம் காணப்பட்டு 6 மாத காலத்திற்கு வழிகாட்டுதலையும், தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த ரூ.10 லட்சம் மானியமும் வழங்கப்பட்டு சந்தை வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படும். விண்ணப்பதாரர்கள் https://www.sustaintn.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் வரும் 15.05.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.