Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

90 வருட பழமையான விமான சட்டம் மாற்றப்படுகிறது நாடாளுமன்ற கூட்ட தொடரில் 6 மசோதாக்கள் தாக்கல்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் 90 வருட பழமையான விமான சட்டத்தை மாற்றுவதற்கு புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடக்கிறது. இதில் 23ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்காக வழிவகை செய்யும் பொருட்டு 1934ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விமானச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய வாயுயன் விதேயக் என்ற சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கொதிகலன்களின் பாதுகாப்பு குறித்த 1923ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய கொதிகலன் மசோதாவுக்கு பதிலாக புதிய பாய்லர் மசோதா, காபி மசோதா, ரப்பர் ஊக்குவிப்பு மசோதா,நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

* அலுவல் ஆலோசனை குழுவில் தயாநிதி மாறன்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் பாஜவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே, அனுராக் தாக்கூர், பர்த்ருஹரி மஹ்தாப், பி.பி. சௌத்ரி, பைஜயந்த் பாண்டா, சஞ்சய் ஜெய்ஸ்வால், காங்கிரஸ் எம்பிக்கள் கொடிக்குன்னில் சுரேஷ்,கவுரவ் கோகோய்,திமுக எம்பி தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாய், சிவசேனா(உத்தவ்) அரவிந்த் சாவந்த்,தெலுங்கு தேசத்தை சேர்ந்த லவுகிருஷ்ணா தேவராயுலு, ஐக்கிய ஜனதா தள கட்சி எம்பி திலேஷ்வர் காமய்ட், சமாஜ்வாடி எம்பி லால்ஜி வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.