மதுரை: அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, அக்கட்சி தலைமையிடம் எடப்பாடி பழனிசாமி கூறவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் பொதுச்செயலாளர் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் சொல்லவில்லை.
ஆனால், ஊடகங்கள் கற்பனையாக சொல்கின்றன. பாமகவின் குடும்ப விவகாரம் பற்றி பேச வேண்டாம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி குறித்து எங்கள் பொதுச்செயலாளர் அறிவிப்பார். அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, அக்கட்சியின் தலைமையிடம் எடப்பாடி சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.