மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.9000கோடி மதிப்புள்ள சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி இருந்தனர்.
இந்நிலையில் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துகளை இதுவரை முடக்கியது. மொத்தம் 18 சொத்துகள், நிரந்தர வைப்பு நிதி, வங்கி இருப்புதொகை உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரிலையன்ஸ் வேல்யூஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் தொடர்பான சென்னையில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 231 குடியிருப்பு நிலங்களும், 7 பிளாட் வீடுகளும் உள்ள சொத்துகளையும் முடக்கியது.
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 7 சொத்துகள் உள்ளிட்ட 18 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், யெஸ் வங்கி மோசடி வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

