விழுப்புரம்: அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ஒமந்தூரார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து பாமக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement