Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் அன்புமணி: எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததே பாமகவால் தான்... அப்போ பாஜ?

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். நேற்று பாமக தலைவர் அன்புமணி தனது மனைவி சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக, தர்மபுரி நகரில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். பின்னர் நிருபர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,‘பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது தொடர்பாக, பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பாமக எதோ திடீரென்று பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது போல் கூறுகிறார்கள். ஆனால் பாமக தொடர்ந்து பாஜவுடன்தான் கூட்டணியில் இருந்து வருகிறோம். வயிற்றெரிச்சலில் இப்படி கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமி சமூக நீதிக்காக என்ன செய்தார். ஒன்றுமே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்ததே பாமகவால் தான். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதை தேர்தல் அறிவிக்கும் கடைசி நேரத்தில், தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக 10.5 இட ஒதுக்கீடு என அடையாளத்துக்காக அறிவிப்பை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. பாஜவுடன் கூட்டணி என்றாலும், பாமக தங்களது கொள்கையிலிருந்து எள்ளவும் என்றும் மாறப்போவதில்லை’ என்றார். எடப்பாடி ஆட்சி செய்ததே பாஜவால்தான் என்று பாஜ தலைவர்களும், ஓபிஎஸ், டிடிவி கூறி வரும் நிலையில், பாமகவால்தான் என்று அன்புமணி மீண்டும் மீண்டும் சொல்லி வருவது அதிமுக யார் தயவில் ஆட்சி நடத்தியது என்று நெட்டிசன்கள் கிண்லடித்து வருகின்றனர்.

* மச்சானா.. பச்சானா...?

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து பண்ருட்டியில் பாமக தலைவர் அன்புமணி நேற்றுமுன்தினம் பேசுகையில், ‘இங்கு 2 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறாங்க. ஒரு வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத். இன்னொரு வேட்பாளர் தேமுதிக கட்சியைச் சேர்ந்த சிவக்கொழுந்து. விஷ்ணு பிரசாத் என்னுடைய மைத்துனர்தான். மச்சான். மச்சானா... பச்சானா... என்று கேட்டால் பச்சான்தான்... தங்கர்பச்சான்’ என்றார்.