மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதாவின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் அதிமுகவை எங்களது கூட்டணிக்கு அமித்ஷா கொண்டு வந்துள்ளார். எங்களை பொறுத்தவரை நாங்கள் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள். எனவே அமித்ஷா சொல்வது தான் எங்களது கருத்து. அதுதான் எங்கள் நிலைப்பாடு. அமித்ஷா தமிழகம் வரும் நேரத்தில், பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை அதிமுகவில் ஒன்றிணைப்பது என்பது, இன்னொரு உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். தேஜ கூட்டணி முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அமித்ஷா சொல்லும் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement


