அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவு
டெல்லி: அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது; பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம் என அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் சமூக வலைதள பதிவில்:
அம்பேத்கரின் தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனித கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் தலைமுறைகளைத் தூண்டினார்.
வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது இலட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என கூறியுள்ளார்.

