ஜம்மு: அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1.65பக்தர்கள் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் இரண்டு வழித்தடங்களிலும் பக்தர்கள் யாத்திரை தொடங்கி நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 9ம் தேதி அமர்நாத் யாத்திரை நிறைவடைகின்றது. ஜம்மு காஷ்மீரின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து நேற்று 11வது குழு புறப்பட்டு சென்றது.
4302 பேர் பஹல்காம் வழியாகவும், 2337 பேர் பால்தால் வழியாகவும் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். சுமார் 159 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி குழுக்களாக இவர்கள் சென்றனர். இதில் 1462 பெண்கள், 41 குழந்தைகள், 181 யாத்ரீகர்கள் அடங்குவார்கள். இந்த ஆண்டு இதுவரை 1.65லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.


