Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நான் செய்த மிக பெரிய தவறு: வைகோ ஆவேச பேச்சு

திருவள்ளூர்: சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நெமிலிச்சேரி மு.பாபு தலைமை தாங்கினார். நகர செயலாளர் சங்கர் வரவேற்றார். கட்சியின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆவடி அந்தரி தாஸ், அட்கோ மணி, ஆ.வந்தியத்தேவன், மணிவேந்தன், செந்தில் செல்வன், சிக்கந்தர், மல்லிகா தயாளன், சென்னை மண்டல மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், கழக குமார், டி.சி.ராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், பாரத் ராஜேந்திரன், லோகநாதன், ஆவடி சூரியகுமார், கருணாகரன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்போது வைகோவிற்கு மாவட்ட செயலாளர் நெமிலிச்சேரி மு பாபு வெள்ளி செங்கோல் மற்றும் மாநாட்டிற்கு நிதி வழங்கினார். கூட்டத்தில் வைகோ பேசியதாவது: எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு மல்லை சத்யா தொடர்பு வைத்திருக்கிறார்.

இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தில் நான் படகில் சென்றபோது கடலில் படகு கவிழ்ந்தபோது உடன் வந்த நண்பர் மல்லை சத்யாவின் தோளை பற்றி கொண்டேன். என் உயிரை காப்பாற்றினார் என்று நான் சொன்னேன். அப்படி சொன்னது உண்மை. 3 முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறிய நிலையில் மற்ற 2 இடங்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும். மல்லை சத்யா 2 ஆண்டுகளில் 7 முறை வெளிநாடு சென்றுள்ளார்‌. இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னை சந்திக்கவும் இல்லை. மதிமுகவில் இருக்கிறேன், துணை பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறேன் என பதிவு செய்யவில்லை.

அதிமுகவுடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் நானல்ல. போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது நான் செய்த மிக பெரிய தவறு. திமுக கூட்டணியில்தான் எந்த சூழலிலும் இருப்போம். இதுவே என் கட்டளை. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பா.கோவிந்தசாமி, கே.சுப்பையா, மாவட்ட நிர்வாகிகள் பி.வி.தனஞ்செழியன், விஜயராகவன், வழக்கறிஞர் கே.எம்.வேலு, சுஜாதா ஹேமச்சந்திரன், ரவிக்குமார், தமிழ்வாணன், நடராஜன், வைகோ தாசன், சீனிவாசன், முருகன், சதீஷ்குமார், வெங்கடேஷ், சங்கர், வழக்கறிஞர் வினோத்குமார், ஒன்றிய, நகர செயலாளர்கள் சத்யா, வெங்கடேசன், போத் ராஜன், பில்லா, மணிகண்டன், பாபு, பிரதாப், செந்தமிழ் இளங்கோ, பாபு பாண்டியன் அக்கீம் எஸ்.ஆர்.மகேஷ்பாபு, ஏழுமலை, ராஜகோபால், நாகராஜ், வெங்கடேசன், பாபு, பார்த்திபன், பூபதி, உதயகுமார், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தினேஷ்குமார், சங்கர், கார்த்திக், திலீபன், மணிகண்டன், ஹேமந்த், மோகனா ஏழுமலை, நெமிலிச்சேரி பா.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கைலாசம் நன்றி கூறினார்.