Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்காக, சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: சென்னையில் உள்ள தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி-அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையம், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி-லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையம் மற்றும் வடசென்ன நாடாளுமன்றத் தொகுதி-ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணிக்காக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிருப்பு 20% உட்பட வடசென்னையில் 357 நபர்கள், தென்சென்னையில் 374 நபர்கள், மத்திய சென்னையில் 380 நபர்கள் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 1433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அசம்பாவிதங்களை தவிர்க்க 3 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 1550 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அதிகாலை 4.30 மணி முதல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.