மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. வழக்கிற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறினர்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடும், இலவச வீட்டு மனை, அரசு வேலை வழங்கி உள்ளது. பாதுகாப்பு கோரி அஜித்குமார் தம்பி நவீன்குமார், சக்தீஸ்வரன், பிரவீன், அருண் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். பாதுகாப்பு கோரிய மனுவை நீதிமன்றம் 7 நாளுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.