சென்னை: "24H ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி 3வது இடம் பிடித்த செய்தி அறிந்து பெருமை கொண்டேன். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் அஜித்குமார் மற்றும் அவரது அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இத்தகைய பெருமைக்குரிய போட்டியில் SDAT லோகோவை ஜெர்சி, வாகனத்தில் பொறித்து விளையாடியதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி. ரேசிங் களத்தில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன்" என அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
+
Advertisement


