Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும் சரத் பவார் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை: தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அஜித் பவார் இன்று அவசர ஆலோசனை

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அஜித் பவார் அணிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. தேசிய வாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் பிரிவு மற்றும் அஜித் பவார் பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிறந்த பிறகு மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டனர். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் சரத் பவார் தரப்பிற்கு அதிக வெற்றிகள் கிடைத்த நிலையில் அஜித் பவார் தரப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தற்போது துணை முதல்வராக உள்ள அஜித் பவாருக்கு ஆதரவாக இருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சரத் பவார் பக்கம் சாய விரும்புவதாக சரத் பவாரின் பேரனான ரோகித் பவார் தெரிவித்துள்ளார். ஆரம்ப முதலே குடும்ப சச்சரவாக இருந்து வரும் நிலையில் ஒரு புறம் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றொரு புறம் அஜித் பாவாணரின் மனைவி என குடும்பத்தை சேர்ந்தவர்களே நேரடியாக மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இதிலும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வெற்றி பெற்றார்.

இத்தகைய சூழ்நிலையில், உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவாரின் கட்சிதான் எனவும் அஜித் பவாரின் பிரிவு காணாமல் போய்விடும் என சரத் பவார் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அஜித் பவாருக்கு தேர்தல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து அஜித் பவார் தரப்பு கட்சி தலைவர்களிடையே ஆலோசனை நடந்துகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அஜித் பவார் இத்தகைய கூட்டத்தை கூட்ட உள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பணியாற்றாமல் போய்விட்டது, பரப்புரையில் ஈடுபடாமல் போய்விட்டது என அஜித்பவார் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. ஆகவே மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாஜக கூட்டணியிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.