விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விமான நிலையத்தில் பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா 2023ல் சென்னையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பிரான்சில் வசித்து வந்த ஜெயகாந்த், மனைவிக்கு விசா பெறும் வரை அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். விசா பெற்றதை அடுத்து சென்னை திரும்பிய தன்ஷிகாவை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். தன்ஷிகா அணிந்த வளையல் தாலி சங்கிலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தனர் .


