Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய விமானப் படைக்கு விரைவில் அதிநவீன உளவு விமானங்கள்: ரூ.10,000 கோடியில் 3 ஐ-ஸ்டார் விமானங்களை கொள்முதல் செய்ய திட்டம்

டெல்லி: இந்திய விமானப்படைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 3 உளவு விமானங்களை ரூ.10,000 கோடியில் வாங்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பேரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சூழலில் இந்த தகவலை இந்திய பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஐ-ஸ்டார் எனபப்டும் உளவு விமானங்கள் எதிரிகளின் ரேடார் நிலையங்கள்,வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற நடமாடும் ராணுவ தளவாடங்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்துவதற்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அத்தகைய மேற்கொள்வதற்கான தெளிவான வான் மற்றும் தரை புகைப்படங்களை பெற இந்திய விமானப்படைக்கு இந்த விமானங்கள் உதவும். இந்த மாதம் கடைசி வாரத்தில் நடைபெற உள்ள உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் இந்த திட்டத்துக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அழைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. தற்போதைய சூழலில் ஐஸ்டார் உளவு விமானங்கள் அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து போற சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. அந்த பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணைய உள்ளது.