சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல்:
எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை கொண்டாடும் இத்தருணத்தில், அதிமுக தொண்டர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்.